மத்திய வங்கியின் அதிகாரிகள் எவரும் விசேட காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படவில்லை
மத்திய வங்கியின் அதிகாரிகள் எவரும் எந்தவித விசேட காரணங்களுக்காகவும் இடமாற்றம் செய்யப்படவில்லை. வருடாந்தம் மேற்கொள்ளும் வழமையான நடவடிக்கையாகவே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்தார். மத்திய வங்கியில் உள்ள திணைக்கள மொன்றில் தொடர்ச்சியாக நீண்டகாலம் பணியாற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் வேறு திணைக்களங் களுக்கு இடமாற்றம் செய்யப்படுவது வழமையானது.
இதற்கு அமையவே அதிகாரிகள் சிலரின் இடமாற்றம் இந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். திறைசேரிமுறி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப்குழுவில் சாட்சியமளித்த மத்திய வங்கி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனிடம் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த அவர், அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு எதுவித விசேட காரணமும் இல்லை, இது வழமையான நடவடிக்கை என்றார். ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதங்களில் அதிகாரிகளுக்கான இடமாற்றம் நடை பெறும். இம்முறை இந்தக் காலப்பகுதியில் தேர்தல் நடைபெற்றமையால் வழமையான இடமாற்றங்களைச் செய்ய முடியாது போனது. இதனாலேயே தேர்தல் மற்றும் அதன் பின்னரான சமாதான காலப்பகுதி முடிவடைந்த பின்னர் அதிகாரிகளுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியில் 18 திணைக்களங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் நீண்டகாலம் ஒரே திணைக் களத்தில் இருந்தால் அவர்களுக்கு அத்துறையில் அலுப்பு அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். இது சாதாரண நடைமுறை என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், நாட்டின் பொருளாதாரத்துக்கு பிராந்தியங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவரை தலைமையாக நியமித்து அங்கு மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
மாகாணங்களில் வங்கிகளின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் சேமிப்புக்கள் ஒட்டுமொத்தமாக கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு இங்கேயே முதலீடு செய்யப்படுகிறது. இதனால் அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு அவர்களின் சேமிப்புக்களால் நன்மை கிடைப்பது குறைவாக உள்ளது.
இந்த நிலைமையை மாற்றி அவர்களின் சேமிப்புக்களால் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அந்தந்த மாகாண ஆளுநர்கள், முதல மைச்சர்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பல தரப்பினருடன் கலந்துரையா டல்களை நடத்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply