உலக இதயம் தினம் இன்று
உலக இதயம் தினம் ‘இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்குவோம்’ என்ற தொனிபொருளில் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மனிதர்களின் உயிர் காக்கும் உறுப்பு இதயமாகும். இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலருக்கும் இதய நோய் வந்துவிடுகிறது. வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் இதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. இது தவிர சிறுவயதிலேயே மது புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பனவும் இதய நோய்க்கு காரணமாக அமைகின்றன.
இளைய தலைமுறை இவற்றை உணர்ந்து தம்மை இதய நோயிலிருந்த காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் உலக இதய தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஆண்டுதோறும் உலகளவில் ஒரு கோடியே 73 லட்சம் இதய நோயினால் மட்டுமே உயிரிழக்கின்றனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது. எனவே, இதயத்தை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று இளைய தலைமுறையினரும் முதியவர்களும் மருத்துவரைக் கலந்தாலோசித்து, இதய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இன்றே மேற்கொள்ளவது மிக அவசியமாகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply