என்ன தான் கூறினாலும் இந்த அரசாங்கத்தினர் என்னை சிறைப்படுத்தமாட்டார்கள். நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்துள்ளேன் :மஹிந்த

mahindaசஜின் வாஸ் குணவர்தனவை அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அண்ணன் சமல் ராஜபக்ஷ கூறியதனை போன்று, பசில், கோத்தபாயவும் கூறினார்கள்.அவரை இணைத்து கெண்டால் என்றாவது ஒரு நாள் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்வீர்கள் என எனது மனைவி ஷிரந்தியும் அறிவுரை கூறினார்.எனது மகன்மார்கள் பல முறை சஜினை அடிக்க முயற்சித்தார்கள் எனினும் நான் அதற்கு இடமளிக்கவில்லை.

எனது பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கமை சஜின் செயற்பட்டு விட்டார் முன்பு மலசலகூடம் செல்வதென்றாலும் என்னிடம் கேட்டு விட்டு தான் செல்வார் ஷிரந்தி முன்பு எல்லாம் சஜினை “பேகேஜ் போய்” என்று தான் அழைப்பார். உண்மையில் நான் வெளிநாடு செல்லும் நாட்களில் அவர் தான் எனது பைகளை பலவந்தமாக எடுத்து செல்வார்.

சஜினின் ஆட்கள் அவரது பைகளை எடுத்து செல்லும் போது சஜின் எனது பைகளை எடுத்து செல்வார். நான் சஜினி்டமிருந்து ஒரு சதத்தையேனும் பெற்றுகொண்டதில்லை. அவர் தான் என்னை விற்பனை செய்து சம்பாதித்தார். என்னை விற்பனை செய்து தான் தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாம் என்று கூறப்படுகின்றது.

அவர் என்ன தான் கூறினாலும் இந்த அரசாங்கத்தினர் என்னை சிறைப்படுத்தமாட்டார்கள். நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்துள்ளேன். மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் வரையில் சஜினை நான் தூரம் போட்டு விடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் கோபத்துடனும் கவலையுடனும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply