சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தும்: அதிபர் புதின்

putinசிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலும் நடைபெறுகிறது. அதன் காரணமாக சிரியாவில் இருந்து அகதிகளாக வருபவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இது மிக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே, நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் சந்தித்து சிரியா பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிபர் பஷார்–அல்– ஆசாத்தை பதவி நீக்கம் செய்ய ரஷியா ஒப்புக்கொள்ளவில்லை.அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முன் வந்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நிருபர்களிடம் கூறும் போது, ’ஐ.நா. சபை ஒப்புதல் அளித்தால் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் அதாவது குண்டு வீசி தாக்குதல் மட்டுமே நடத்த முடியும். ராணுவத்தை அனுப்பி போரிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply