பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி – 68 பேர் படுகாயம்

iraqpfஈராக் தலைநகர் பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனை அருகே தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதல்களில் 24 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் பாக்தாத்தின் காதிமியா பகுதியில் முக்கிய சோதனை சவாடியை தாண்டி செல்ல முயன்ற 3 தற்கொலை படை தீவிரவாதிகளை போலீஸ்சார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஆனால் மற்ற இருவரும் வெடிக்குண்டுகளை வெடிக்க செய்ததில் சுமார் 24 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply