எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீண்டும் அபாண்டம்

da3c7009-0a7c-485a-bccb-a3eea910a627_S_secvpf(1)அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கடந்த வாரம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஐ.நா.வுக்கான அந்த நாட்டு நிரந்தர உறுப்பினர் பிலால் அகமது நேற்று முன்தினம் பேசும் போதும், இந்த பிரச்சினையை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி.) உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் சபா அல்-காலத் அல்-சபா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஓ.ஐ.சி. உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டனர்.

 

இதில் பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாக ஓ.ஐ.சி. அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தானுக்குள் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கும் இந்தியா துணைபோகிறது. பாகிஸ்தானின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு பதிலாக இந்தியா மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 

ஐ.நா. அமைப்பின் தீர்க்க முடியாத சர்வதேச சர்ச்சைகளில் மிகவும் பழமையான பிரச்சினையாக இருப்பது காஷ்மீர் விவகாரம். காஷ்மீரில் இந்திய படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதுடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன.

 

எனவே காஷ்மீரிகள் மீதான அடக்குமுறைகளுக்கு முடிவு கட்டி, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நீண்ட நாள் பிரச்சினைகளில் அமைதி ஒப்பந்தங்களை உருவாக்க இந்தியாவை ஓ.ஐ.சி. உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

 

இவ்வாறு சர்தாஜ் அசிஸ் கூறியதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply