சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை நிலையத்தை குண்டுவீசி துவம்சம் செய்த ரஷ்ய விமானப்படை: வீடியோ
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை அழித்தொழிக்கும் பணியில் முதல் தாக்குதலிலேயே ரஷ்யா அபார சாதனை புரிந்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் பல மாதங்களாக சிரியாவில் நடத்திவரும் வான்வழி தாக்குதலில் பல ஐ.எஸ். தீவிரவாதக்குழு தலைவர்களும், படைவீரர்களும் கொல்லப்பட்டுள்ள வேளையிலும், முதல் தாக்குதலிலேயே சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை நிலையத்தை குண்டுவீசி துவம்சம் செய்த ரஷ்ய விமானப்படையின் சாகச வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிறகு சுமார் 600 ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் இருந்து தப்பியோடி விட்டதாக ரஷ்ய நாட்டு ஊடகங்கள் பெருமிதத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் கடந்த 24 மணிநேரமாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான 9 முக்கிய நிலைகள் மீது ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில், ராக்காவுக்கு அருகே உள்ள ஐ.எஸ். தலைமை நிலை முற்றிலுமாக தரைமட்டமானது.
குறிப்பாக, சுகோய்௩4 ரக போர் விமானங்கள் கான்கிரீட்டை கூட துவம்சம் செய்து பொடிப்பொடியாக்கும் பேடாப் 500 ரக குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள ராக்கா பகுதி மீது வீசியது. இந்த வீடியோவை ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply