வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்குமரம் பழுது பார்க்கப்பட்டு வருகிறது

velidadeவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பழைய தூக்குமரம் தற்சமயம் பழுது பார்க்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் தலைமையகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மரணதண்டனைக் கைதிகள் அச்சத்தில் உள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. சுமார் 40 வருடங்களாக செயற்படாமல் இருந்த இந்தத் தூக்குமரத்தைப் பழுதுபார்க்க 50 ஆயிரம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் அமுலாக்கப்படும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றத் தயாராக இருப்பதற்காகவே இந்தப் பழுதுபார்ப்பு வேலை நடந்து வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்ததும் தூக்குத்தண்டனை அமுலுக்கு வருமென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தின் அடிப்படையிலேயே தூக்குமரம் தயார்செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply