வெளிநாடுகளில் பதுக்கல்: இந்தியர்கள் ஒப்புக்கொண்ட கருப்பு பணம் ரூ.4,147 கோடி
இந்தியர்கள் பலர் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தாங்களாகவே ஒப்புக்கொண்டால் அந்த தொகைக்கு 60 சதவீதம் வரி மட்டும் விதிக்கப்படும், நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவித்தது. இந்த அவகாசம் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது.
இதில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம் பற்றி ஒப்புக்கொண்டவர்கள் அறிவித்த தொகை ரூ.3,770 என்று வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆதியா கூறும்போது, ‘‘கருப்பு பணம் பதுக்கியதாக 638 பேர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் அறிவித்துள்ள மொத்த தொகை ரூ.4,147 கோடி. இதன்மூலம் அரசுக்கு ரூ.2,488.20 கோடி வரியாக கிடைக்கும்’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply