இலங்கை அரசின் முரண்பாடான போக்கை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் : கருணாநிதி

karunaஇலங்கை அரசின் முரண்பாடான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இப்போதாவது இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஐ.நா.பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைக்கு அனுமதிக்கமுடியாது என்ற இலங்கை அதிபரின் பேட்டியை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளின் முகத்திலும் கரியை பூசும் வகையில் இலங்கை அரசு நடந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.இலங்கையின் இத்தகைய மாறுபட்ட நடவடிக்கைகளை அனைத்து நாடுகளிடமும் விளக்கி, இந்தியா சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply