மருத்துவமனை மீது தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது: ஆப்கானுக்கான அமெரிக்க தளபதி விளக்கம்

usa armyஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை மன்னிக்க முடியாதது மட்டும் அல்ல இது ஒரு குற்ற செயல் என்று ஐ.நா. கடுமையாக கண்டித்தது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த மருத்துவமனையில் நோயாளிகளும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர். தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலியானார்கள் மேலும் 37 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply