சிரியா விவகாரம்: ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமுடியாது – அமெரிக்கா திட்டவட்டம்
சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமுடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ நாடுகளின் போர் விமானங்களுடன் மோதல் ஏற்படாமல் தவிர்பது பற்றி பேச்சு நடத்த தயார் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை பரிசிலித்து வருவதாக ரஷ்யா பாதுகாப்பு மந்திரி கூறியிருந்தார்.
ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது.
இது பற்றி அமெரிகாவின் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் கூறுகையில் “ சிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா மிகவும் தவறான வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தாமல் தவறான இடங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதவரையில் அவர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply