சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மேலும் ஒரு மூத்த வக்கீல் நியமனம்

jeya3சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரின் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பி.வி.ஆச்சார்யா கடைசி நேரத்தில் கர்நாடக அரசு சார்பில் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அவர் அரசு சார்பில் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

 

இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மூத்த வக்கீல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். இவருடன் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டிலையும் கர்நாடக அரசு நியமித்தது.

 

இந்த நிலையில் மூத்த வக்கீல் ஆச்சார்யா பரிந்துரை செய்ததை ஏற்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட மேலும் ஒரு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே என்பவரை கர்நாடக அரசு நியமனம் செய்துள்ளது.

 

அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யாவுடன், துஷ்யந்த் தவே இணைந்து பணியாற்ற உள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply