வன்னி மக்கள் பற்றி சர்வதேச மட்டத்தில் உண்மைக்குப் புறம் பான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது
இலங்கையில் தமிழ் மக்கள் கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்ற வகையில் சர்வதேச மட்டத்தில் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை இன்னல்களுக்கு உள்ளாக்கியிருப்பவர்கள் அரசியல் நோக்கத்துடன் வெளியிடும் பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே சர்வதேச மட்டத்தில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான பிரசாரங்கள் வன்னியில் மோதல் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களை மையமாகக் கொண்டனவாகவே இருக்கின்றன. இம்மக்கள் சில பிரச்சினை களுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இப் பிரச்சினைகள் அனைத்துக்கும் புலிகளே பொறுப்பாளிகள் என்பதைத் தொலைதூரத்திலிருந்து கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் மனித உரிமை வாதிகளும் ஜனநாயகவாதிகளும் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
மோதல் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பது சகஜம். அந்தப் பகுதிக ளிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அவர்கள் வெளியேறுவது தான் பொருத்தமான தீர்வு. இதுவரையில் ஐம்பதாயிரம் பேர் வரை இவ்வாறு வெளியேறி வந்திருக்கின்றார்கள்.
இப்படி வெளியேறியவர் களைத் தங்க வைப்பதற்கு அரசாங்கம் நிவா ரணக் கிராமங்களை அமைத்திருக்கின்றது. இக்கிராமங்களில் தற்காலிகமாகத் தங்கி வாழும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கு தங்கியிருக்கும் மக்கள் அச்ச உணர்வு இல்லாமலும் நிம்மதியாகவும் வாழ்கின் றார்கள். அண்மையில் இக்கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இதைப் பாரா ளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக் கப்படுவார்களேயானால் அவர்களும் அச்ச உணர்வற்றதும் நிம்மதியானதுமான வாழ்க் கையை நடத்த முடியும். ஆனால் புலிகள் அவர்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருக்கின்றார்கள். மறைவாக வெளியேற முயற்சிப்பவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இதுவரை பலர் உயி ரிழந்துள்ளனர்.
அண்மையில் இவர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாதக் குழந்தையொன்றும் காயமடைந்தது. இராணு வத்தினர் துரிதமாகச் செயற்பட்டு அக்குழந் தையைக் காப்பாற்றினார்கள். மோதல் பிரதேசத்திலுள்ள மக்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு அங்கேயே பாது காப்பு வலயமொன்றை அரசாங்கம் பிரகட னப்படுத்தியது. மக்களோடு மக்களாக அவ்வலயத்தினுள் சென்ற புலிகள் அங்கே பங்கர் அமைத்துக்கொண்டு அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துகின்றார்கள்.
மக்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இதில் இருப்பதை மறுக்கமுடியாது.
மோதல் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அரசாங்கம் போதுமான உணவுப் பொருட்களை அனுப்பி வருகின்றபோதும் அப்பொருட்களில் பெரும் பகுதியைப் புலிகள் எடுத்துவிடு கின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்கெனத் தொடர்ச்சியாகக் கருத் துத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகப் பிரியர்களும் இவற்றை விளங்கிக்கொள்ளாமல் தடம் மாறிப் பேசுகின்றார்கள். புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிப்பது தான் தமிழ் மக்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய சேவை.
அதைவிட்டு, யுத்தநிறுத் தம் பற்றி இவர்கள் பேசுவது புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான செயற்பாடு. இது தமிழ் மக்களுக்கு நன்மைபயப்பதல்ல. கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட புலி களின் செயற்பாடு இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியதோடு தமிழ் மக்களை இடம் பெயரவைத்துத் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கி ன்றது. யுத்தநிறுத்தம் மீண்டும் அந்த நிலை மைக்கு வித்திடுவதாகவே அமையும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply