இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நவம்பர் 7-ம் தேதிக்குள் நிரந்தர தீர்வு: சிறிசேனா உறுதி

Maihthtrஇலங்கைச் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் நவம்பர் 7-ஆம் தேதிக்கு முன்பாக நிரந்தர தீர்வு எட்டப்படும் என அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார். இத்தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சேவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அதிபர் சிறிசேனாவிடம் தொலைபேசி வாயிலாக நீதித்துறை மந்திரி பேசினார். அப்போது, அரசியல் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் நவம்பர் 7-ம் தேதிக்கு முன்பாக நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என அதிபர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா அல்லது விடுவிப்பதா அல்லது சட்ட நடவடிக்கைகள் தொடருமா? என்பது பற்றி அதிபர் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்றும் சுமந்திரன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply