ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆண்டு வருமானம் ரூ.32 ஆயிரம் கோடி: அதிர்ச்சி தகவல் வெளியீடு
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு பெரும்பாலான பகுதிகளை பிடித்து தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு அவர்களை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடைகளும், ரஷியாவும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மற்றும் ஆயுதங்கள், போர்தள வாடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதற்கு அவர்கள் ஆண்டுக்கு 32 ஆயிரம் கோடி வருமானமே காரணம் என தெரிய வந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் ஒட்டு மொத்த எண்ணை கிணறுகளையும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பீப்பாய்கள் வரை எண்ணை உற்பத்தி செய்கின்றன.
இவர்களுக்கு நூற்றுக் கணக்கான எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதை அமெரிக்க கூட்டுப் படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எண்ணை ஏற்றுமதி செய்ய விரும்பாத இவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு எண்ணை விற்பணை செய்கின்றனர்.
மேலும, மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் மற்றும் வணிகர்கள் நடத்தும் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி போன்றவற்றில் இருந்தும் வருமானம் ஈட்டுகின்றனர். ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடி வருமானம் பெறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply