மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 ரக பயணிகள் விமானம் கிழக்கு உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் பன்னாட்டு விசாரணை நடந்து வந்தது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையின் 169வது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
விமானத்தை பக் ஏவுகணை தாக்கிய வேகத்தில் 2 விமானிகள் மற்றும் 2 துணை விமானிகள் பலியாகியுள்ளனர். விமானிகள் இறந்த பிறகு குறைந்தபட்சம் ஒன்றரை நிமிடத்திற்கு விமானம் நடுவானில் பறந்து அதன் பிறகு கீழே விழுந்துள்ளது.
விமானிகள் இறந்த பிறகு விமானம் பறக்கையிலேயே சில பயணிகள் மயங்கிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை பயணிகள் உணர்வதற்குள் விமானம் கீழே விழுந்துள்ளது.
பயணிகள் விமானம் விழுவதை உணராததால் தான் கடைசி நிமிடத்தில் யாரும் தங்கள் பிரியமானவர்களுக்கு மெசேஜோ, செல்போனில் காலோ செய்யவில்லை. சிலர் மட்டும் இருக்கையில் உள்ள கைப்பிடியை கட்டியாக பிடித்துள்ளனர். ஒரு பயணியின் உடல் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கிடந்தது.
விமானம் உடைந்த பிறகு காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் இருந்திருக்கும். விமானத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறந்து பயணிகள் படுகாயம் அடைந்து தரையில் விழுந்திருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply