நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகளில் திருப்தியடைகிறார் கூட்டமைப்பு :எம்.பி. வினோ நோகராதலிங்கம்
மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் அச்சமின்றி நிம்மதியாக வாழுவதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தத்தம் உயிர்களை பாதுகாக்க அம்மக்கள் எடுக்கும் முடிவுக்கு குறுக்கே யாரும் தடை போடக்கூடாது என்றும் சுயமாக வெளியேற விரும்பும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் வினோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் வவுனியாவில் ஏற்படுத்தியுள்ள நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு ள்ளனர். இவர்களைப் பார்வையிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. வினோ நோகராதலிங்கம் அண்மையில் சென்றிருந்தார். அம்மக்களுடன் கலந்துரையாடியும் உள்ளார். இதனடிப்படையிலேயே கடந்த வியாழக்கிழமை வினோ எம்.பி. பாராளுமன்றத்தில் தனது நிவா ரணக் கிராம விஜயம் பற்றி தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பாதுகாப்பு படையினரின் விதவைகள், அநாதைகளுக்கான ஓய்வூதியத் திருத்தச் சட்டமூலம் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தகருத்துக்களை முன்வைத்தார்.
இந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விதவைகள் உருவாவதை இல்லாமல் செய்வதே எமது விருப்பம் என்று தெரிவித்த வினோ எம்.பி. மேலும் கூறுகையில்:-
நிவாரணக் கிராமங்களில் இராணுவத்தினரால் சில வீடுகள் ஓரளவு வசதிகளுடன் கட்டப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
முகாமினுள் சிறு சிறு தேவைகள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டியிருப்பினும் அங்கு சதொச விற்பனை நிலையம், பாடசாலை, வங்கிகள் என்பன திறம்பட இயங்குகின்றன. அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை இனங்கண்டு செயற்படுகிறார்கள்.
அங்குள்ள மக்களை சொந்தக்காரர்கள் பார்வையிடவும், குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சி னைகளை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவினதும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனதும் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
இப்பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றேன். உணவு சுகாதார வசதிகள் சிறப்பாக செயற்படுத்தப்படுவதாக கூறுகின்ற மக்கள் யுத் தத்தில் அகப்பட்டு காயமுற்றிருக்கும் மக்களுக்கு ஐ.சீ. ஆர்.சீ. போன்ற அமைப்புக்கள் செய்கின்ற சேவையை நாம் பாராட்டுகின்றோம்.
யுத்தத்திற்குள் அகப்பட்டுள்ள மக்க ளுக்கு மருந்துப் பொருட்களும், உணவுப் பொருட்களும் கிரமமாக அனுப்பிவைப்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும். சுயமாக வெளியேற விரும்பும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படவேண்டும்.
எமது மக்களின் அவல வாழ்வை பயன்படுத்தி நிதியோ, பொருட்களோ சேர்ப்பவர்கள் மீது எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் சேர்க்கப்பட்ட நிதியோ, பொருட்களோ எவ்வளவு தூரம் மக்களை சென்றடையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என எச்சரி ப்பதுடன் சொந்த மக்களுக்கு உணவுப் பொருட்களோ பாதுகாப்போ எதுவாக இருப்பினும் அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply