சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொல்ல உத்தரவிட்டதாக புகார்: ராஜபக்சே மீது விசாரணை

170px-Mahinda_Rajapaksa_2006இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். எந்த நாடும் கண்டிராத அளவுக்கு போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றன.

 

இது தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பம்.போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் 2 நாள் விவாதம் நடந்தது.

 

விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை பொறுத்தமட்டில், அமெரிக்காவிடம் இலங்கை விட்டுக்கொடுத்து விட்டது என குற்றம் சாட்டினர்.

 

போர்க்குற்றம் தொடர்பான விசாரணை, கலப்பு முறையிலானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

இந்த குற்றச்சாட்டுக்களை சிறிசேனா அரசின் சார்பில் வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா திட்டவட்டமாக மறுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

வெள்ளைக்கொடியுடன் சரண் அடைய வந்தவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் (பாலச்சந்திரன்) ஆகியோரை கொலை செய்யவேண்டிய அவசியம், களத்தில் இருந்த ராணுவ வீரர்களுக்கு இல்லை. ஆனால் உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படிதான் அது நடைபெற்றுள்ளது.

 

எனவே கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்ட திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையை பரணகம குழு செய்துள்ளது.

 

இவ்வாறு அவர் கூறினார். ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த ஏற்ற வகையில் சட்ட திருத்தம் அவசியம் என்பதையே மந்திரி மங்கள சமரவீரா சூசகமாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply