அமெரிக்க நாடாளுமன்ற சிறப்பு குழு முன்பு ஹிலாரி கிளிண்டன் ஆஜரானார்

clintonஅமெரிக்க நாடாளுமன்ற சிறப்பு குழு முன்பு பெங்காசி படுகொலை தொடர்பாக, அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர், ஹிலாரி கிளிண்டன், 11 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.  லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, கடந்த 2012, செப்டர்மாதம் 11 ஆம் தேதி, தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில், கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்ளிட்ட, நான்கு பேர் உயிரிழந்தனர். பெங்காசி படுகொலை என்றழைக்கப்படும் இந்த சம்பவத்திற்கு, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என, கூறப்பட்டது. 

 

லிபியாவில், அப்போதைய அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்த சூழலில், பெங்காசி தூதரக பாதுகாப்பை பலப்படுத்த, வெளியுறவு துறை அமைச்சராக இருந்த ஹிலாரி, தவறி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளை, ஹிலாரி மறைத்து விட்டதாக அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசு கட்சி புகார் தெரிவித்தது.

 

இதையடுத்து, பென்காசி சம்பவம் குறித்து விசாரிக்க, அமெரிக்க எம்.பி.,க்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு முன், ஹிலாரி நேற்று ஆஜராகி, சரமாரியாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு, 11 மணி நேரம், சளைக்காமல் பதில் அளித்தார்.

 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது பழி சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹிலாரி, அனைத்து புகார்களையும் ஆதாரங்களுடன் மறுத்தார். அவரது வாக்குமூலம், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கி விட்டதாக, அமெரிக்க பத்திரிகைகள் புகழ்ந்துள்ளன.

 

மேலும், ‘டுவிட்டர்’ இணையதளத்தில், ஹிலாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளருக்கான போட்டியில், ஜனநாயக கட்சி சார்பில், ஹிலாரி கிளிண்டன், முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply