இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவு: வெள்ளை மாளிகை பிரதமர் மோடிக்கு புகழாரம்

1024px-WhiteHouseSouthFacadeசர்வதேச அளவில் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லுறவு பேணி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச அளவில், பல்வேறு விவகாரங்களில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.  

 

இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடு, அதிபர் ஒபாமாவிற்கு மிகவும் திருப்தியளிப்பதாக இருப்பதால் மோடியுடன் இணைந்து தங்கள் நாடுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, சர்வதேச அளவிலான முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஒபாமா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச அளவில், பொருளாதார வாய்ப்புகள் மேம்படுத்தும் பொருட்டு, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெள்ளை மாளிகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எரிக் ஸ்கல்ட்ஜ் கூறியுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply