ஒரு நொடிக்கு 500 பாட்டில் மதுவை பொழியும் லவ்ஜாய் வால்நட்சத்திரம்

vaalதனது பெயருக்கு ஏற்றவகையில் ஒரு நொடிக்கு 500 பாட்டில் மதுவை வானில் லவ்ஜாய் வால்நட்சத்திரம் பொழிவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பூமியில் மது தயாரிக்க பயன்படும் எத்தில் ஆல்கஹாலை லவ்ஜாய் வனில் பீய்ச்சி அடிப்பதாக பாரீஸ் வானிலை ஆய்வுக்கூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லவ்ஜாய் வால்நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் மதுவானது ஒரு நொடிக்கு 500 ஒயின் பாட்டில்கள் அளவுக்கு இருப்பதாகவும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிரபஞ்சம் உருவான போது சிதறிய துண்டுகள்தான் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே வால்நட்சத்திரங்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய மர்மத்தை அவிழ்க்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எத்தில் ஆல்கஹால் மட்டும் அல்லாமல் லவ்ஜாய் வால்நட்சத்திரத்தில் மேலும் 20 விதமான மூலக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் வால்நட்சத்திரங்களில் இருந்து கிடைத்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply