ஐ.நா.வின் தீர்மானத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு அழுத்தம் கொடுப்போம் : எதிர்க்கட்சித்தலைவர்

sampanthanஇலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பங்­க­ளிப்­புக்­களை வழங்­க­வுள்­ள­தோடு அதற்­கு­ரிய அழுத்­தங்­களை தொடர்ந்தும் வழங்­கு­வோ­மென எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை 10மணிக்கு பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள புளொட் அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது கருத்­து­வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி யிட்­ட அவர், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது வர­வேற்­கத்­தக்­க­தாகும். அதில் பல்­வேறு விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட தரப்­புக்­க­ளுக்­கான பரி­காரம் கிடைக்­கு­மென்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது.
புதிய ஆட்­சி­யா­ளர்­களின் போக்கு வித்­தி­யா­ச­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

அவர்கள் எமக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளார்கள். அது­மட்­டு­மன்றி புதிய அர­சாங்கம் ஐ.நா.சபை உட்­பட சர்­வ­தே­சத்­திற்கும் பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளது. குறிப்­பாக ஐ.நா.சபையின் தீர்­மா­னத்தை புதிய அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அத்­தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்­று­வது குறித்து மேற்­கொள்­ளப்­படும் நியா­ய­மான செயற்­பா­டு­க­ளுக்க எம்­மா­லான பங்­க­ளிப்­புக்­களை வழங்­க­வேண்டும். அது மட்­டு­மன்றி அவ்­வி­ட­யங்­களை முழு­மை­யாக முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய அழுத்­தங்­களை நாம் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.

ஐ.நா.தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது குறித்த ஆலோ­ச­னை­களை வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­கட்­சி­களின் கூட்­டத்தை நடத்­தி­யி­ருந்தார். அதன்­போது அனைத்து தரப்­பி­னரும் எழுத்து மூல­மான நிலைப்­பாட்டை வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் தனித்­த­னி­யாக அக்­கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருக்க போதும் அனை­வ­ரு­டைய கருத்­துக்கள் தொடர்­பிலும் கூடி­யா­ராய வேண்­டி­யுள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக காணப்­படும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­த­ர­மான தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மொன்று தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. அதனை குழப்பும் வகையில் எமது செயற்­பா­டுகள் அமைந்­து­வி­டக்­கூ­டாது. அனைத்து கரு­மங்­களும் பக்­கு­வ­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

அர­சியல் கைதிகள் தொடர்­பாக நாம் அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அதன் அடிப்­ப­டை­யி­லேயே அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. குறிப்­பாக எதிர்­வரும் 31ஆம் திக­தி­யி­லி­ருந்து பாரிய குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தவிர்ந்த ஏனை­ய­வர்­களை விடு­விப்­பது குறித்து நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சாங்­கத்­தினர் எமக்கு உறுதியளித்துள்ளார்கள். அந்தச் செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும் பாரிய குற்றங்கள் இழைத்தவர்களாக யாராவது இனங்காணப்படு வார்களாயின் அவர்கள் தொடர்பாக தகவல்கள் பெறப்பட்டு அவர்களின் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப் படமுடியும் என்பது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply