வட கொரிய ரோந்துப்படகு மீது தென்கொரியா துப்பாக்கி சூடு

koriyaகொரியாவில் 1950-53-ம் ஆண்டுகளில் நடந்த போருக்கு பின்னர் வட கொரியா, தென் கொரியா இடையே தீராத பகை இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை தொடர்வதால் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கமாக உள்ளது.சமீபத்தில் கூட (இரு தரப்பு) படைகள் இல்லாத பிரதேசத்தில் கண்ணிவெடி தாக்குதல் நடந்தது. இதில் தென்கொரிய வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு எதிராக தென் கொரியா, எல்லையில் ஒலிப்பெருக்கி அமைத்து, எதிர்ப்பு பிரசாரம் செய்தது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் உருவானது. பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரச உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 3.30 மணிக்கு வடகொரியாவின் ரோந்துப்படகு ஒன்று, பிரச்சினைக்குரிய கடல் எல்லைக்குள் புகுந்து அலைந்து திரிந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அந்த படகின்மீது தென்கொரிய கடற்படை 5 முறை துப்பாக்கியால் சுட்டது. இதில் பாதிப்பு எதுவும் நேரிட்டதாக தகவல் இல்லை.

இருந்தபோதும் தங்களது படகை தென்கொரியா சுட்டிருப்பது ஆத்திரமூட்டும் செயல் என வடகொரியா கூறி உள்ளது. தங்கள் படகு வழக்கமான பணியில்தான் ஈடுபட்டதாகவும் அந்த நாடு தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply