எல்லையில் தாக்குதல்: இந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

armyகாஷ்மீர் எல்லையில் கடந்த 23-ந் தேதி முதல் தினமும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.

 

இதைத்தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதர் ஜே.பி.சிங்கை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேற்று நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான வெளியுறவுத்துறை இயக்குனர் முகமது பைசல் இந்த கண்டனத்தை தெரிவித்ததாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply