இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ்

wikiliksஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக, தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் மறைமுகமாகப் பயன்படுத்துகிறது என்று விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் முறைகேடுகளை அவ்வப்போது அம்பலப்படுத்திவரும் “விக்கிலீக்ஸ்’ இணையதளம், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் ஜான் பிரென்னனின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் ஊடுருவி, அதிலிருந்து மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த மின்னஞ்சல்களில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் குறித்தும், ஈரான் மீதான அமெரிக்காவின் கொள்கைகள் ஆகியவை குறித்தும் 13 பக்கங்களில் பிரென்னன் விரிவாக எழுதியுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, அவருக்கு பிரென்னன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கை முறியடிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் விரும்புகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ராணுவ உதவி அளிப்பது குறித்தும் பாகிஸ்தான் கவலை கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டால், இந்தியா, ஈரான் ஆகிய நாடுகளை சமாளிப்பதற்காக, தலிபான் அமைப்புடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட முடியும்.
ஆப்கானிஸ்தானில் ஒருங்கிணைந்த பழங்குடிகள் நிர்வாகப் பகுதிகளில் தலிபான்களை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற குழப்பமான நிலையில் பாகிஸ்தான் இருந்தது. எனினும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்காக, தலிபான்களை பாகிஸ்தான் நேரடியாக ஆதரிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான ஒவ்வொரு போரிலும் கூட்டுப்படை வெற்றி பெற்றுள்ளபோதிலும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் அவர்களால் மிகப்பெரிய அளவில் வெற்றிகாண முடியவில்லை என்று அந்தக் கடித்தில் ஜான் பிரென்னன் கூறியுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதியபோது, பிரென்னன் தனியார் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு, அமெரிக்க அரசின் பயங்ரவாத ஒழிப்புப் பிரிவில் ஒபாமாவின் ஆலோசகராகவும், 2013-ஆம் ஆண்டில் அந்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply