மக்களுக்குத் துன்பம் விளைவித்து அதன் மூலம் தனக்குச் சாதகமாக பிரச்சினையொன்றை உருவாக்கி அதனூடாக யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதே பிரபாகரனின் நோக்கம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது மகன் சாள்ஸ் அன்ரனியும் புதுக்குடியிருப்பில் மோதல் தவிர்ப்பு வலயப் பகுதியில் அடிக்கடி காணப்படுவதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களே இதைத் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிக்கு இராணுவச் சீருடையின்றி அடிக்கடி வரும் பிரபாகரனும் சாள்ஸ் அன்ரனியும் மக்களோடு மக்களாக நின்று அரச படையினருக்கு எதிரான போரில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென மக்களைக் கோருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
மோதல் தவிர்ப்பு வலயத்தின் கிழக்குப் புறத்திற்கு மிக நெருக்கமாக படையினர் சென்றுவிட்ட நிலையில் பிரபாகரன் நேரத்திற்கு நேரம் மோதல் தவிர்ப்பு வலயப் பகுதிக்கு வந்து செல்வதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு வரும் பிரபாகரனையும் அவரது மகன் சாள்ஸ் அன்ரனியையும் சுற்றி பலத்த ஆயுதங்களை ஏந்திய விஷேட மெய்ப் பாதுகாவலர்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பிரபாகரன் நாட்டைவிட்டு வெளியேற முயலமாட்டார் எனவும் அங்குள்ள மக்களுக்குத் துன்பம் விளைவித்து அதன் மூலம் தனக்குச் சாதகமாக மனிதாபிமானப் பிரச்சினையொன்றை உருவாக்கி அதனூடாக யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதே அவரது நோக்கமென படையினர் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply