விண்வெளியிலிருந்து இலங்கை கடலில் விழவுள்ள மர்மமான பொருள்
விண்வெளியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் விழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டபிள்யூ .ரி.1190.எப்’ என அழைக்கப்படும் மேற்படி சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிரபஞ்ச நேரப்படி 6.20 மணிக்கு இலங்கையின் தென் பிராந்திய கடற்கரைக்கு அப்பால் சுமார் 65 கிலோமீற்றர் தொலைவில் இந்து சமுத்திரத்தில் விழவுள்ளதாக ‘நேச்சர்’ ஆய்வேடு அறிக்கையிட்டுள்ளது.
இந்த 7 அடி நீளமான சிதைவு அண்மையில் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் நடவடிக்கையில் பங்கேற்ற ஏவுகணையின் பாகமாகவோ அல்லது 40 வருடங்களுக்கு மேலாக விண்வெளியிலிருந்த அப்பலோ விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தச் சிதைவு எமது பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசிக்கையில் அதன் பெருமளவான பாகம் எரிந்து விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘டபிள்யூ.ரி.1190.எப் ‘ சிதைவின் பாதை முதன்முதலாக 2012 ஆம் ஆண்டில் அளவிடப்பட்டது. இந்த இனங்கண்டறியப்படாத சிதைவு அமெரிக்க அரிஸோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கற்றலினா வான் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியார்களால் இந்த மாத ஆரம்பத்தில் மீள அவதானிக்கப்பட்டது.
ஹவாய் பல்கலைக்கழகத்தின் மயுனா கீயிலுள்ள 7 அடி நீளமான விண்வெளி தொலைநோக்கியாலேயே மேற்படி சிதைவு அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply