தமிழக மீனவர்கள் 120 பேர் விடுதலை: இலங்கை வெளியுறவுத்துறை தகவல்

fisch manஇலங்கை சிறையில் உள்ள தமிழக 120 மீனவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.சிறையில் உள்ள 120 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மஹிஷினி கோலேன்னே தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சிறையில் உள்ள 36 மீனவர்களை இந்திய அரசு விடுவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் விடுதலை செய்யப்படவுள்ள 120 மீனவர்களில், கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 34 மீனவர்களும் அடங்குவார்களா என்பது குறித்து அவர் ஏதுவும் கூறவில்லை.

முன்னதாக 86 மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply