டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக விசாரிக்க கோரி அரசு மனு

daclasசூளைமேட்டில் 1986-ல் நடந்த கொலை தொடர்பாக இலங்கை முன் னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக விசாரிக்கக் கோரி அரசு மனுதாக்கல் செய்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.டி.பி) தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந் தார். அப்போது தீபாவளியையொட்டி அப்பகுதியில் சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இதற்கு டக்ளஸ் தேவானந் தாவின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது.

இதில், சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணைக்காக 1990-ம் ஆண்டு ஜ_லை 18-ம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆஜரான டக்ளஸ் தேவானந்தா பின்னர் ஆஜ ராகவில்லை.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்து பிறப்பித்ததுடன், அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து தலைமறைவு குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. பின்னர், பிடிவிறாந்தை இரத்து செய்யக் கோரியும், இவ்வழக்கு விசாரணையை வீடியோ கொன்பரன்சிங் மூலம் நடத்த வேண்டியும் 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை அமர்வு நீதிமன்றம் இரத்து செய்தது. மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டக்ளஸ் தேவனந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தா மீதான இவ்வழக்கை இரண்டாகப் பிரித்து விசாரிக்கக் கோரி அரசு நகர குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ன்ஜகன், 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல்; செய்தார். நீதிபதி எம்.சாந்தி இம்மனுவை விசாரித்து வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply