உலகின் தலைசிறந்த மனிதர்களில் மோடிக்கு 10-ஆவது இடம்
உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து, உலகப் பொருளாதார மன்றம் (டபிள்யூஇஎஃப்) நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா முதலிடத்தையும், மகாத்மா காந்தி 4-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். உலக அளவில் 125 நாடுகளைச் சேர்ந்த 285 நகரங்களில், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,084 இளைஞர்களிடம், இந்த ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த மனிதர்கள் குறித்து, உலகப் பொருளாதார மன்றம் அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்தக் கருத்துக்கணிப்பில், 3 சதவீத வாக்குகளை பெற்று, பிரதமர் நரேந்திர மோடி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா 20.1 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தையும், 12.4 சதவீதம் வாக்குகளை பெற்று மகாத்மா காந்தி 4-ஆவது இடத்தையும் பெற்றனர். போப் பிரான்ஸில் 2-ஆவது இடத்தையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 5-ஆம் இடத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா 7-ஆவது இடத்தையும், அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃபே 11-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply