கிரீஸ் நாட்டில் திறந்த வெளியில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அகதிகள்
கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் போதிய இடமில்லாததால், அகதிகள் அனைவரும் திறந்த வெளியில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் அகதிகளாக மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணம் செய்கின்றனர். இதுவரை கிரீஸ் வழியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர். அகதிகளின் வருகையை ஒட்டி கிரீஸ் முழுவதும் ஏராளமான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அகதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு கூடுதலாக 120 பேரை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையரை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தற்காலிகள் முகாம்களில் போதிய இட வசதியின்மையால் அகதிகள் திறந்த வெளியில் தங்கியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply