டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தவறுகிறது: கருணாநிதி
டெங்கு காய்ச்சலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வராமல் அதிமுக அரசு அலட்சியப்படுத்துமானால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி இன்று வியாழக்கிழமை தமது சமுக வளைத்ததில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இதை தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பொய்யான தகவலை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஒரு மாதக்காலத்தில் இது தொடர்பாக ஏற்பட்டுள்ள சாவு எண்ணிக்கைகளை கூட தவறாக வெளியிட்டுப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக எண்ணற்ற சிறு குழந்தைகளும் போதுமான சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்து வருவதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
“தொடர்ந்து இந்த டெங்கு காய்ச்சல் வரத் தொடங்கியதுமே எதிர்க் கட்சிகள் சார்பில் பல முறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதிலே அக்கறை காட்டவில்லை. இதையெல்லாம் உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய முதலமைச்சரோ, கோடைநாடு முகாமிலிருந்து காணொலி காட்சிகள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும், அரசு நிர்வாகத்தை நடத்திக் கொண்டு, அன்றாடம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கியதாக ஏடுகளுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் தலைநகரிலே இல்லாததால், எந்த அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கே வருவதில்லை; அவரவர் துறை நிர்வாகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகமே அனாதையாகி விட்டது” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இருந்தபோதும் இது போன்ற சூழல்களை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க் கட்சிகளின் கடமை என்கிற காரணத்தால் இந்த எச்சரிக்கை விடப்படுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply