அசாம் – மேகாலயாவில் நிலநடுக்கம் வங்காளதேசத்திலும் குலுங்கியது

erthஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அயர்ந்து மக்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அலறியடித்தபடி எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்தனர். அங்கு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தில், வங்காள தேசத்தின் எல்லையில் உள்ள கரிம்கஞ்ச் மாவட்டத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் வங்காள தேசத்திலும் உணரப்பட்டது. அசாம், மேகாலயா மற்றும் வங்காள தேசத்தில் 10 முதல் 12 வினாடிகள் நிலநடுக்கம் இருந்தது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் 6–வது பெரிய பூகம்ப மைய பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply