உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதே மீள் குடியேற்றத்திற்கான தீர்வு : அநுரகுமார திஸாநாயக்க

ANURAவடக்கு கிழக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதம் மூலம் மக்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் பாதுகாப்பு வலயங்கள், தற்போது தேவையற்றனவாக காணப்படுகின்ற நிலையில், அவை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் தற்போது முரண்பாடு இல்லாத காரணத்தினாலேயே அவற்றின் தேவை இல்லாது போயுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கான, போர்க் காலத்தின் போது உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவைப்பட்டிருந்தன’ என அவர் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து 28 கிலோமீற்றர் வரை தூரமுள்ள பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறிக் குண்டுத் தாக்குதல்களிலிருந்து விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்காக உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியிருந்தது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளிடம், 28 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக்கூடிய ஆட்லறி காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோர் குடியமர்த்தப்பட்டிருப்பது, அவர்களது சொந்த நிலங்களில் அல்ல எனவும், இது புதிய பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும், நாட்டில் 80,000 புதிய வீடுகள் தேவைப்படுவதாகவும், அதே நேரத்தில், 1990களிலிருந்து வருடந்தோறும் 26,800 ஹெக்டேயர் காட்டை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு காடழிக்கப்பட்டு வருவதானது, நாட்டை ஒரு பாலைவனமாக மாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply