இஸ்ரேல் ஆதரவுடன் இந்தியா தயாரித்த ‘ரிசாட்’ செயற்கைக்கோள் அடுத்த மாதம் அனுப்பப்படுகிறது

இஸ்ரேல் ஆதரவுடன் இந்தியா தயாரித்த ‘ரிசாட்’ செயற்கைகோள், அடுத்த மாதம் அனுப்பப்படுகிறது. பூமியை இரவு நேரத்திலும் படம் பிடித்து அனுப்பும் ரிசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது.

1,780 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பனி மூட்டம் காணப்படும் நேரங்களிலும் பூமியை தெளி வாக படம் எடுத்து அனுப்பும் திறன் கொண்டதாகும். அத்துடன் மண் வளம் குறித்த துல்லியமான தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன் படைத்ததாகும்.

இந்த செயற்கைகோளில் பயன்படுத்த அதி நவீன ராடர் கருவியை (சிந்தடிக் அபெர்ச்சூர் ராடார்) இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த சாதனம் மூலம் விஞ்ஞானிகள் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற செயற்கைக்கோளுக்கு கட்டளையிட முடியும்.

மேலும், 3 மீட்டர் முதல் 50 மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியையும், 10 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை உள்ள இடங்களையும் ஆய்வு செய்வதற்கு அந்த கருவி பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயற்கைக்கோள் பறக்கவிடப்படும் திகதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனேகமாக வருகிற ஏப்ரல் மாதம் 5 அல்லது 6 ந் திகதி இந்த செயற்கை கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பறக்க விடப்படும்.

இதுதவிர அனுசாட் என்ற சிறிய செயற்கை கோளையும் பறக்க விட இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்த செயற்கை கோளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. இதற்கிடையே, வெளி நாட்டு உதவி இல்லாமல், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தையும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்தி ‘ரிசாட்’ என்ற புதிய செயற்கைகோளை வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ நிறுவனம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியில் பறக்கவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply