சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 40 பேர் பலி
சிரியாவில் அதிபர் ஆதரவு படையின் ஏவுகணை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. சிரியாவில் சில பகுதிகளும், ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக நடந்து வருகிற கிளர்ச்சியும் தீவிரம் அடைந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதில் அரசு படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டமாஸ்கஸ் நகருக்கு 15 கி.மீ. வடகிழக்கில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டவுமா நகர சந்தைப்பகுதியில், அதிபர் ஆதரவு படைகள் இன்று தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நேற்று மார்க்கெட் மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply