சிரியாவில் முதல் தரைப்படையை களம் இறக்கும் அமெரிக்கா: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய அதிரடி
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி, முக்கிய நகரங்களை வசப்படுத்தி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா அங்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. சிரியாவில் தரைப்படைகளை நேரடியாக களம் இறக்க தீர்மானித்து இருப்பதாக நேற்று முன்தினம் அமெரிக்கா சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், ஒபாமாவின் ஒப்புதலின் பேரில் முதற்கட்டமாக, 50-க்கும் குறைவான சிறிய அளவிலான சிறப்பு படைகள் வடக்கு சிரியாவில் களமிறங்கும் என்ற அறிவுப்பு நேற்று வெளியாகியுள்ளது.
வடக்குபகுதியில் குர்தீஷ் படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இங்கு களமிறங்கும் அமெரிக்க சிறப்பு படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் உள்ளூர் படையினருக்கு உதவுவார்கள் என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு படையினரின் வருகையை ஒட்டி, தரைவழித் தாக்குதல் விமானமான ஆ௰, மற்றும் பைட்டர் ஜெட் விமானமான F௧5 போன்றவை தென் துருக்கிக்கு அனுப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply