ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள் தான்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது

isisஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த எகிப்து மீட்பு படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 17 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, தாங்கள் தான் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளமும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த தளத்தில் “ஐ.எஸ். போராளிகள் எகிப்தின் சினாய் மாகாணத்தில், 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கடவுளுக்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply