ரஷ்யாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது: விமான விபத்தில் உயிரிழந்த ரஷ்யர்களுக்கு அஞ்சலி
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு சென்ற மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான 9268 என்ற A-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழந்துவிட்டதாக எகிப்து மீட்பு படை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவை சேர்நதவர்கள். இந்த கோர விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்டு தலைவர்களும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தை ரஷ்யாவின் மிகப்பெரும் சோக சம்பவமாக குறிப்பிடும் வகையில், நாளை (நவம்பர்-1) தேசிய துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply