பாகிஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 11 பேர் பலி

pks பாகிஸ்தானில் உள்ளாட்சி தேர்தலின் போது இரு தரப்பினரிடைய ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் சுமார் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ராம் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் கட்சி கடும் சவால் விடுத்து வருகிறது.  கடந்த மாதம் இரண்டு மாகாணங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், இம்ரான் கானின் கட்சி கைபர் பாக்துன்காவா பகுதியிலும், நவாஸ் ஷெரீப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மேற்கு பாலுசிஸ்தான் பகுதியில் வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பாகிஸ்தானில் பஞ்சாப், மற்றும் சிந்துமாகாணங்களில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற சிந்து மாகாணம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. பஞ்சாபில் 14 மாவட்டங்களிலும் சிந்து மாகாணத்தில் 8 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாபில் 1578 இடங்களுக்கு 40,101 வேட்பாளர்களும், சிந்து மாகாணத்தில் 10 ஆயிரம் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

 

இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நேற்று தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கார்புர் மாவட்டத்தில் இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றது. இம்ராம் கானின் கட்சியினரும், நவாஸ் ஷெரீப் கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.

 

இரு தரப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply