அரபிக் கடற்பகுதியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது பிரமோஸ் ஏவுகணை

recketஇந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை, பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. தொடர் வெற்றிகளால், இந்திய ராணுவத்தில் தரைப்படை மற்றும் கடற்படையில் பிரமோஸ் ஏவுகணைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.290 கிலோ மீட்டர் தூரம் வரை, சுமார் 300 கிலோ அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் சிறப்புடையதாகும்.

இந்நிலையில், சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை, ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பலில் இருந்து அரபிக் கடற்பகுதியில் வெற்றிக்கரமாக இன்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, துல்லியமாக சென்று இலக்கினை தாக்கியது. இத்துடன், பிரமோஸ் ஏவுகணை 49-முறை சோதனை நடத்தியுள்ளது.

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான, ‘ஐ.என்.எஸ்., கொச்சி’ கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 7,500 டன் எடை கொண்ட இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட சக்தி வாய்ந்த போர்க்கப்பல் இதுவாகும்.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வலிமை வாய்ந்த ராணுவ பலத்தை இந்தியா பெற்றுள்ளதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply