வடகொரியா அணு ஆயுத திட்டங்களை உடனே நிறுத்த வேண்டும்: அமெரிக்கா, தென்கொரியா கூட்டாக எச்சரிக்கை

Koran ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி அணு ஆயுத தயாரிப்பில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும் நீண்ட தூர ஏவுகணைகளையும் அடிக்கடி அந்த நாடு சோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டுப்படைகளின் வருடாந்திர ஆய்வுக்கூட்டம் தென்கொரிய தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஆஷ் டன் கார்ட்டர் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு மந்திரி ஹான் மின்-கூ ஆகியோர் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

 

இதுகுறித்து ஆஷ் டன் கார்ட்டர் கூறும்போது, ‘கெரிய தீபகற்ப பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், தொடர்ந்து அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் வடகொரியா விளங்கி வருகிறது. அந்த நாடு தனது அணு ஆயுத திட்டங்களை உடனே நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.

 

மேலும், வடகொரியாவின் ராணுவ தூண்டுதல்களை இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply