கிரீஸ் நாட்டில் கடலில் மூழ்கிய 22 கப்பல்கள்: குவிந்து கிடக்கும் புதையல்
கிரீஸ் நாட்டில் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய 22 கப்பல்களில் புதையல் குவிந்து கிடக்கிறது. கிரீஸ் மற்றும் அமெரிக்க நாடடின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு கடலில் ஆய்வு மேற்கொண்டது. அதில் கிரீஸ் நாட்டில் போர்னி கடல் பகுதியில் ஏராளமான கப்பல் விபத்துகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கு 40 கப்பல்கள் விபத்துக்கள் நடந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் போர்னி பகுதியில் ஒரே இடத்தில் மட்டும் 22–க்கும் அதிகமான கப்பல்கள் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கி கிடக்கின்றன.
இந்த விபத்துக்கள் கி.மு. 700–ம் ஆண்டில் தொடங்கி கி.பி. 16–ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் நடந்துள்ளன. கிரீஸ் நாட்டில் இருந்து சைப்ரஸ் மற்றும் எகிப்து நாடுகளுக்கு கப்பல் சேவை நடந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மூழ்கிய பகுதி முழுவதும் புதையல்கள் குவியலாக கிடக்கின்றன. அவற்றை மீட்டு பத்திரப்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமேஸ் மற்றும் இகாரியா தீவுகளுக்கு இடையே கிரீசின் போர்னி பகுதி அமைந்திருப்பதால் தான் அங்கு அதிக கப்பல் விபத்துக்கள் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply