செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? முக்கிய அறிவிப்பை நாசா இந்த வாரம் அறிவிக்கிறது

MARSஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.

இதற்காக 4 வகையான விண்வெளி திட்டங்களை கையில் எடுத்துள்ள நாசா முதற்கட்டமாக, வரும் 2018-க்குள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் மெகா ராக்கெட்டை தற்போது உருவாக்கி வருகிறது. முதல் திட்டத்தை 2029-லும், 2-வது திட்டத்தை 2032-லும், 3-வது திட்டத்தை 2033-ம் ஆண்டிலும், கடைசி திட்டத்தை 2039-வது ஆண்டிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 2039-க்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா முயற்சித்து வருகிறது. எனினும், இதற்கான செலவு விபரங்களை தெரிவிக்க நாசா மறுத்துவிட்டது.

சமீபத்தில் நாசா விண் வெளி ஆய்வு மையம் அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறியது. இதன் மூலம் அங்கு மனிதன் வாழ தகுந்த சூழல்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாசா மீண்டும் இந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்து மேலும் பல் தகவல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது. செவ்வாயின் அடர்த்தியான வளிமண்டல ஆய்வில் சிக்கிய முக்கிய கண்டுபிடிப்பை அறிவிக்க உள்ளது. இது 10 மாத ஆய்வின் முடிவாகும். செவ்வாயில் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான வாழ்வாதாரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த 2013 நவம்பர் 18 ஆம் தேதி மேவன் விண்கலத்தை அனுப்பியது.

வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவு செய்துள்ள அந்த விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடைந்து ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்து முதலில் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. இதன் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் அறிவிக்கலாம் என கூற்ப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply