இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

erthஇந்தோனேஷியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று பின்னிரவு 12.44 மணியளவில் டைமோர் மாகாணத்தில் உள்ள அலோர் தீவை மையமாக கொண்டு 14.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டிலி என்ற இடத்தின் மேற்கு-வடமேற்கில் 77 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு டைமோர் மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவுமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply