ருமேனிய இரவு விடுதி தீவிபத்தில் 132 பலி : பிரதமர் பதவி விலகினார்
ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 132 பேர் பலியானர்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட விடுதிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதால் தான் தீ விபத்து ஏற்பட்டது என கூறபட்டது.இதை தொடர்ந்து ருமேனிய பிரதமர் விக்டோர் பாண்டா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நேற்று புகா ரெஸ்ட்டில் பொது மக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள். இப்போராட்டத்தில் மொத்தம் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மக்களீன் போராட்டத்திற்கு பணிந்த பிரதமர் விக்டோர் பாண்டா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply