ரஷிய விமான விபத்து ஐ.எஸ். மீண்டும் பொறுப்பேற்பு
எகிப்தில் 224 பேருடன் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதற்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீண்டும் பொறுப்பேற்றனர்.
எகிப்தில் பயங்கரவாதிகளின் செல்வாக்கு நிறைந்த சினாய் பகுதியில் ரஷியாவுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சனிக்கிழமை விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்திலிருந்த 224 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உடனடியாகப் பொறுப்பேற்றது.
எனினும் அதுகுறித்து அந்த அமைப்பு அதிக விவரங்களைத் தெரிவிக்காததால் அந்த அமைப்பின் அறிவிப்பு குறித்து சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், “ரஷிய விமானத்தை எவ்வாறு வீழ்த்தினோம் என்ற விவரத்தை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவோம். தற்போது அதற்கான அவசரம் வரவில்லை” என்று தெரிவித்தனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply