நெருக்கடி நிலைக்கு மாலத்தீவு பாராளுமன்றத்தில் ஒப்புதல்: துணை அதிபர் அகமது அதீப் பதவி பறிப்பு

Maldives_vice_pres_2595763fஅதிபரை கொல்ல முயன்ற வழக்கில் கைதான மாலத்தீவு துணை அதிபருக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் கடந்த 10 நாட்களுக்கு முன் சவுதிக்கு குடும்பத்துடன் ஹஜ் புணித யாத்திரை சென்றார்.ஹஜ் பயணத்தை முடித்து கொண்டு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் மாலேவுக்கு படகு மூலம் திரும்பிகொண்டிருந்தார்.

அப்போது மாலே துறைமுகம் அருகே படகு வந்து கொண்டிருக்கும் போது திடீரென வெடித்தது. இதில் அதிபர் யாமின் மனைவி மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் காயமின்றி மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய 2 பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.அதிபர் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் ராணுவ மந்திரி ஜலீல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அதிபரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் காபர் கடந்த அக்டோபர் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் துணை அதிபர் அகமது அதீப்க்கு எதிராக கண்டன தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று கூடிய மாலத்தீவு பாராளுமன்ற கூட்டத்தில், அந்த தீர்மானம் மீது இரண்டு மணி நேரமாக விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில், அத்தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஓட்டெடுப்பில் 85 எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்களில், 61 பேர் கண்டன தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

அதனால், கண்டன தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. கடந்த 5 மாதங்களில், கண்டன தீர்மானத்துக்கு ஆளான இரண்டாவது துணை அதிபர் அகமது அதீப் ஆவார். இதனால் அவரது பதவி பறிக்கப்பட உள்ளது. மேலும், நேற்று அறிவிக்கப்பட்ட 30 நாள் நெருக்கடி நிலைக்கும் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply