பதற்றமான சூழ்நிலையில் உலகின் இரு சக்தி வாய்ந்த நாடுகளின் போர் கப்பல்கள் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?

world shipசில வாரங்களுக்கு முன்பாக யு.எஸ்.எஸ். லாசன் என்ற போர்க்கப்பல் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது. சர்வதேச கடல்பகுதி மற்றும் வான்பகுதியை அனைத்து நாடுகளும் பயன்படுத்துவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் சர்சைக்குரிய தென்சீன கடல்பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லாசன் போர்க்கப்பல் சென்றபோது அது மற்றொரு சீன போர் கப்பலால் பின் தொடரப்பட்டது. மேலும் சீன கடற்படை வீரர்கள், அமெரிக்க போர் கப்பலில் இருந்தவர்களிடம் ரேடியோ மூலம் தொடர்புக்கொண்டு பேசினார்கள்.

தற்போது, உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகளின் போர் கப்பல்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல்கள் வெளியாகியுள்ளது. 300 வீரர்களை கொண்ட யு.எஸ்.எஸ். லாசன் போர்க்கப்பலின் தளபதி ராபர்ட் பிரான்சிஸ் இதுபற்றி கூறுகையில் ‘‘சீன வீரர்கள் அதிக முறை கேட்ட கேள்வி நீங்கள் சீன கடல் பகுதியில் என்ன செய்கிறீர்கள்? என்பதுதான்.

சில வாரங்களுக்கு முன்பு எங்களை பின்தொடர்ந்து வந்த சீன போர்கப்பல் வீரர்களிடம், ஹே, வரும் சனிக்கிழமை என்ன பிளான்? நாங்கள் பீட்சாவும், சிக்கன் விங்கும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடிறிங்க.. என்று சாதாரணமாக பேச ஆரம்பித்தோம். இதன் மூலம் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான், எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று நினைத்தோம்.

அவர்களும், தாங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களின் குடும்பம் மற்றும் இதுவரை சென்றுள்ள இடங்கள் பற்றி பேச தொடங்கினார்கள். ஸ்பார்ட்லி தீவு அருகே செல்லும் போதுக்கூட நாங்கள் சுமூகமாகதான் பேசிக்கொண்டோம்.

குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகு இனி உங்களை பின் தொடர முடியாது. உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம் என்று சீன வீரர்கள் கூறினார்கள்” என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply